"தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா"- ஜிவி பிரகாஷ் சொன்னது என்ன?

ஜிவி பிரகாஷ் கலந்து கொண்ட நேர்காணலில் தனுஷின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பட்டது.

"தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா"- ஜிவி பிரகாஷ் சொன்னது என்ன?
Published on

சென்னை,

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷிடன், "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், "என் நண்பர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் என் சப்போர்ட் அவருக்கு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தனது திரைப்பயணத்தில் பிசியாக இருக்கும் அதே வேளையில், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை வலுப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான 'கர' திரைப்படத்தைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தனுஷ் ஆலோசனை

திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்துவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். வாரம் ஒருமுறை மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, மன்ற செயல்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அன்னதானம், ரத்ததானம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டப் பணிகளை மன்றங்கள் மூலம் தனுஷ் மேற்கொண்டு வருகிறார்.

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவு

இந்த நிலையில், மன்றத்தை வலுப்படுத்தவும், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தனுஷ் தரப்பில் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் மட்டுமல்லாது, தொகுதி வாரியாகவும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் நற்பணி மன்றங்களைத் தொடங்கி, புதிய உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும், தனுஷின் இந்த அதிரடி மாற்றங்கள் அரசியல் களத்தில் அவரது முதல் அத்தியாயமா? என்ற கேள்வி தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தனுஷ் அரசியலுக்கு வந்தால்...

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷிடன், "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், "என் நண்பர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் என் சப்போர்ட் அவருக்கு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணி

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்களது கூட்டணியில் வெளியான ‘பொல்லாதவன்’,‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com