"யாதும் அறியான்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர்கள் தினேஷ், தம்பி ராமையா, அப்புகுட்டி, ஆனந்த் பாண்டி உள்ளிட்டோர் நடித்த ‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் கோபி இயக்கத்தில் சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள படம் 'யாதும் அறியான்'. நடிகர் தினேஷ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பிரேக்கிங் பாயின்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நாயகியாக பிரானா நடித்துள்ளார் நடிகர் அப்புக்குட்டி. தம்பி ராமையா, விஜய் 'டிவி' கே.பி ஓய் ஆனந்த் பாண்டி, ஷியாமல், ஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொல்லிமலையில் இருக்கும் ஒரு பழைய பங்களாவிற்கு சென்ற நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி சைக்கோ திரில்லர் ஜானரில் இப்படத்தை கோபி படமாக்கியுள்ளார் இவர், ஏற்கனவே 'தி பிளைண்ட் டைரக்டர் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் இது சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது
படம் பற்றி இயக்குனர் கோபி, நடிகர் தினேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: படத்தில் நடித்தவர்கள் அனைவரும் இரவு, பகலாக அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு ஈடுபாட்டோடு, சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களாகவே மாறி தங்கள் நடிப்பை, திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். படம் நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும். ஜூன் அல்லது ஜூலையில் படம் ரிலீசாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






