கவர்ச்சியில் போட்டி போடும் யாஷிகா ஆனந்த்- ஐஸ்வர்யா தத்தா

யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கவர்ச்சியில் போட்டி போடும் யாஷிகா ஆனந்த்- ஐஸ்வர்யா தத்தா
Published on

View this post on Instagram

A post shared by Yash (@yashikaaannand)

தமிழில் கவர்ச்சியாக நடித்து இளைஞர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவரும், 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தாவும் தோழிகள் ஆவார்கள்.

இருவரும் சின்னத்திரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்று பிரபலமானார்கள். பின்னர் நடந்த எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்கி யாஷிகா நீண்ட காலம் சிகிச்சையில் இருந்தார்.

தற்போது உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் யாஷிகா. அதேபோல ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் 'அலேகா', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா', 'கன்னித்தீவு', 'பொல்லாத உலகில் பயங்கரமான கேம்', 'மில்லர்', 'காபி வித் காதல்' ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.

இந்த நிலையில் யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பச்சை நிறத்தில் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கலக்கலாக துள்ளி குதித்து ஆட்டம் போடும் காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இருவரில் யார் கவர்ச்சி அழகி என்பது குறித்த விவாதமும் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com