டிடிஎப் வாசனின் “ஐபிஎல்”..சின்மயி குரலில் 2வது பாடல் வெளியீடு


Yaavalo Song From IndianPenalLaw is Out Now
x

‘ஐபிஎல்’ படத்தில் டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னை,

டிடிஎப் வாசன் நடித்துள்ள “ஐபிஎல்” படத்திலிருந்து 2வது பாடல் வெளியாகி உள்ளது.

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ‘ஐபிஎல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் ‘அப்போ இப்போ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘ஐபிஎல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘யாவாலோ’ தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடலை சின்மயி மற்றும் சிவம் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளனர்.

1 More update

Next Story