"என் திரைப்பயணமே எனக்கு ஆசிரியர்" - தேசிய விருது வென்ற நடிகை யாமி கவுதம் உருக்கம்

யாமி கவுதம், 2012-ம் ஆண்டு வெளியான 'விக்கி டோனர்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.
யாமி கவுதம்
Published on

மும்பை,

'ஆர்டிகல் 370' திரைப்படத்தில் நடித்ததற்காக 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ள நடிகை யாமி கவுதம், தனது திரையுலக பயணமே தனக்கு மிகப்பெரிய பாடங்களை கற்றுக்கொடுத்த ஆசிரியராக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆர்டிகல் 370

தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கிய யாமி கவுதம், 2012-ஆம் ஆண்டு வெளியான 'விக்கி டோனர்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் 'காபில்', 'உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்', 'பாலா', 'ஏ தர்ஸ்டே', 'தாஸ்வி', 'ஆர்டிகல் 370', 'ஹக்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தேசிய விருது

இதற்கிடையில் இவர் நடித்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை மையமாகக் கொண்டு உருவான 'ஆர்டிகல் 370' திரைப்படம், 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை(யாமி கவுதம்) மற்றும் சிறந்த இசை என மொத்தம் 3 தேசிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்தது.

திரைப்பயணமே ஆசிரியர்

இந்நிலையில், தேசிய விருது வென்ற யாமி கவுதமுக்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து யாமி கவுதம் பகிர்ந்த பதிவில், "எனது திரையுலகப் பயணமே எனக்கு மிகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஆசிரியராக இருந்தது. தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், வளரவும், எனது கலைக்கு உண்மையாகவும் இருப்பேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com