வெறுப்புக்கு பதிலாக அன்பை பெற்றுவிட்டார் யாஷ்: சாய் பல்லவி

‘ராவணனாக நடித்த யாஷ் வெறுப்புக்குப் பதிலாக அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார்’ என்று நடிகை சாய் பல்லவி பாராட்டியுள்ளார்.
வெறுப்புக்கு பதிலாக அன்பை பெற்றுவிட்டார் யாஷ்:  சாய் பல்லவி
Published on: 

ஐதராபாத்,

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யஷை பாராட்டிப் பேசினார்.

ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சி

ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், நடிகர் யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யஷை பாராட்டிப் பேசினார் . சாய் பல்லவி பேசியதாவது: , “ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரத்துக்கு வெறுப்பு கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், யாஷ் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வெறுப்புக்குப் பதிலாக அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார்’ என்றார்.

தினமும் படப்பிடிப்பு தளத்தில் தியானம் செய்தேன்

மேலும் பேசிய சாய் பல்லவி கூறியதாவது: சீதையாக நடிப்பதற்காக நான் தினமும் படப்பிடிப்பு தளத்தில் தியானம் செய்தேன். ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடிக்க சீதா தேவி தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன் இந்தத் திரைப்படத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாகவும், ஒரு நேரடித் தமிழ்ப் படத்திற்கு எப்படி இருக்குமோ அதே போன்ற நளினத்துடனும் நேர்த்தியாக அமைந்துள்ளது” என்றார்.

நவம்பர் 5ல் ரிலீஸ்

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களையும் சேர்த்து 4 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் பல ஆயிரம் தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com