தமிழ் இயக்குனருடன் கைகோர்க்கும் யாஷ் ?


Yash to join hands with a Tamil director?
x

தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு 'டாக்ஸிக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் யாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. தற்போது, பி. எஸ். மித்ரன் நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் -2 படத்தை இயக்கி வருகிறார்.

1 More update

Next Story