ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாஷிகா ஆனந்த்... என்ன நடந்தது?

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாஷிகா ஆனந்த்... என்ன நடந்தது?
Published on: 

சென்னை,

அவரது மூக்கில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டும், உதட்டில் ரத்தக்கறை இருப்பது போன்றும் காட்சியளித்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், யாஷிகாவுக்கு என்ன ஆனது? அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? எனக் கவலையுடன் கேள்வி எழுப்பினர்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதே ஆண்டில் வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து, 2018-ம் ஆண்டு வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த், அதிலிருந்து மீண்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் வெளியான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலும் நடித்திருந்தார்.

அதிர்ச்சியளித்த புகைப்படங்கள்

இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவரது மூக்கில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டும், உதட்டில் ரத்தக்கறை இருப்பது போன்றும் காட்சியளித்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், யாஷிகாவுக்கு என்ன ஆனது? அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? எனக் கவலையுடன் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அந்த புகைப்படங்கள் அனைத்தும் 'ஹாலோவீன்' கொண்டாட்டத்திற்காக அவர் வித்தியாசமான வேடமிட்டு எடுத்தவை என்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

X