டுவிட்டரில் இருந்து விலகிய யாஷிகா

யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் இருந்து விலகிய யாஷிகா
Published on

தமிழில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தற்போது பேய் படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக யாஷிகா ஆனந்த் அறிவித்து உள்ளார். டுவிட்டரில் தற்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டுவிட்டரின் புதிய கொள்கையால் சந்தா கட்டாத பிரபலங்களின் கணக்கில் உள்ள 'புளூ டிக்' நீக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடரும் பிரபல நடிகர், நடிகைகளின் 'புளூ டிக்'கையும் நீக்கிவிட்டனர்.

இது நடிகர், நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து டுவிட்டரில் இருந்து விலகுவதாக யாஷிகா ஆனந்த் தெரிவித்து உள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் டுவிட்டரை விட்டு வெளியேறுகிறேன். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. பணம் கொடுத்து புளூ டிக் பெற முடியாது. எல்லோரும் டுவிட்டரை விட்டு வெளியேறி விடலாம்'' என்று தெரிவித்து உள்ளார். அவரது பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com