சமந்தா நடித்துள்ள 'யசோதா' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகை சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சமந்தா நடித்துள்ள 'யசோதா' படத்தின் டீசர் வெளியானது..!
Published on

சென்னை,

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'யசோதா' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com