இந்தியில் அறிமுகமாகும் யாஷின் 'டாக்சிக்' மற்றும் விஜய்யின் 'தளபதி 69' தயாரிப்பாளர்கள்?


Yashs Toxic and Vijays Talapati 69Producers debut in Hindi?
x
தினத்தந்தி 1 Oct 2024 3:25 AM GMT (Updated: 1 Oct 2024 3:27 AM GMT)

யாஷின் 'டாக்சிக்' மற்றும் விஜய்யின் 'தளபதி 69' படங்களை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் இருந்து விரைவில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதில் ஒன்று யாஷ் நடித்து வரும் டாக்சிக். இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தெரிகிறது.

மற்றொன்று விஜய் நடிக்க உள்ள 'தளபதி 69'. இப்படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களையும் கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த தயாரிப்பாளர்கள் இந்தியில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கேவிஎன் நிறுவனம் தெஸ்பியன் பிலிம்ஸுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இத்திட்டம் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தாலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story