யோகி பாபுவின் "கஜானா" 3வது பாடல் வெளியானது


தினத்தந்தி 5 April 2025 7:45 PM IST (Updated: 5 April 2025 7:45 PM IST)
t-max-icont-min-icon

யோகி பாபு, வேதிகா நடித்துள்ள ‘கஜானா’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

சென்னை,

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. மேலும் இப்படத்தில் சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு விக்ரம் வர்மன் இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும் அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது. யோகி பாபு, வேதிகா நடித்துள்ள 'கஜானா' படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 'கஜானா' படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் 'சுற்றும் உலகை' பாடலை வாசன் பாடியுள்ளார்.

1 More update

Next Story