யோகி பாபுவின் “கெணத்த காணோம்” படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி நாளை வெளியிடுகிறார்.
யோகி பாபுவின் “கெணத்த காணோம்” படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘சத்ய சோதனை’ உள்ளிட்ட படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சுரேஷ் சங்கையா. இதன் இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்து, இப்போது ‘கெணத்த காணோம்’ வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக தியாகராஜன், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில், யோகி பாபு நடிக்கும் ‘கெணத்த காணோம்’ படத்தின் டிரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தி இப்படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com