

கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘சிங்காரம்’படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கே.வி. கதிர்வேலு எழுத்து மற்றும் இயக்கத்தில் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ‘சிங்காரம்’. சென்ட்ராயன், ஜி.மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, தீபா, நடிகர் இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில், ரமணா பாலாஜி, பத்மாவதி காந்தி ஆகியோர் தயாரித்துள்ள படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
ஒரு சாமானியனின் உத்வேகம் அளிக்கும் பயணத்தையும், அவனது வாழ்க்கையை மாற்றும் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘சிங்காரம்’படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் அக்டோபர் 30ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது.