சரித்திர கதையில் யோகிபாபு

சிம்புத்தேவன் இயக்கும் சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் யோகிபாபு நடிப்பது உறுதியாகி உள்ளது.
சரித்திர கதையில் யோகிபாபு
Published on

நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறக்கும் யோகிபாபு கதாநாயகனாகவும் நடிக்கிறார். அடுத்து சிம்புத்தேவன் இயக்கும் சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் யோகிபாபு நடிப்பது உறுதியாகி உள்ளது. சிம்புத்தேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், மனோராமா உள்ளிட்டோர் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி சரித்தர படம் 2006-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இரண்டு வேடங்களில் அதில் நடித்து இருந்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கியபோது தகராறு செய்து வடிவேலு விலகியதால் படம் நின்று போனது. இதற்காக வடிவேலு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்து நடவடிக்கையும் எடுத்தது. தற்போது யோகிபாபு நடிக்கும் படத்தை இம்சை அரசன் 23-ம் புலிகேசி சாயலில் நகைச்சுவை கதையம்சம் கொண்ட ராஜா காலத்து சரித்திர படமாக சிம்புத்தேவன் எடுக்கிறார். கசட தபற, விக்டிம் படங்களுக்கு பிறகு சிம்புத்தேவன் இந்த படத்தை இயக்குகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com