யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் அப்டேட்

யோகி பாபு நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் அப்டேட்
Published on

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

யோகிபாபு 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com