'கருப்பாக இருக்கிறாய்' - உருவ கேலி செய்த பிரபல நடிகர்...!

நடிகை சாந்திப்பிரியா தன்னை நடிகர் அக்‌ஷய்குமார் உருவகேலி செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்
'கருப்பாக இருக்கிறாய்' - உருவ கேலி செய்த பிரபல நடிகர்...!
Published on

தமிழ், தெலுங்கு, இந்தியில் 1980 மற்றும் 90-களில் பிரபல நடிகையாக இருந்தவர் சாந்திப்பிரியா. எங்கள் ஊரு பாட்டுக்காரன், ஒன்று எங்கள் ஜாதியே, ரெயிலுக்கு நேரமாச்சு, என் வழி தனி வழி, கைநாட்டு உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை ஆவார்.

இந்த நிலையில் தன்னை நடிகர் அக்ஷய்குமார் உருவகேலி செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சாந்திபிரியா கூறும்போது, "நான் அக்ஷய்குமார் ஜோடியாக இக்கே பே இக்கா இந்தி படத்தில் நடித்தேன். கிளாமர் கதாபாத்திரம் என்பதால் எனக்கு குட்டையான உடைகளை கொடுத்தார்கள்.

இதனால் என் முழங்கால்கள் நன்றாக தெரிந்தன. அதை பார்த்த அக்ஷய்குமார், "என்ன ஆனது? முழங்காலுக்கு அடிபட்டதா. இவ்வளவு கருப்பாக இருக்கிறது? ஐய்யே'' என்று உருவகேலி செய்தார். அதை கேட்டு செட்டில் இருந்த அனைவரும் சிரித்தனர். எனக்கு அப்போது 23 வயது.

அக்ஷய் குமார் செய்த உருவ கேலியால் நான் டிப்ரஷனுக்கு ஆளானேன். எனது ஸ்கின் கலரை கேலி செய்த அக்ஷய்குமார் அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. என் அக்கா பானுப்பிரியா கூட இதுபோன்ற உருவகேலிகளை எதிர்கொண்டார்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com