“என்னுடைய நம்பர்1 நீங்கள்தான்”... நடிகை சுருதி ஹாசனின் தந்தையர் தின பதிவு!

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
“என்னுடைய நம்பர்1 நீங்கள்தான்”... நடிகை சுருதி ஹாசனின் தந்தையர் தின பதிவு!
Published on

உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களது தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் நாளாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகை சுருதி ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு மிகவும் பிடித்த மனிதர், எப்போதும் என்னுடைய நம்பர் 1 நீங்கள் தான்... இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா, ஐ லவ் யூ!” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com