நீயெல்லாம் கடவுள் கிடையாது... வேலைய மட்டும் பாரு - கவனம் ஈர்க்கும் 'இறைவன்' டிரைலர்..!

ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நீயெல்லாம் கடவுள் கிடையாது... வேலைய மட்டும் பாரு - கவனம் ஈர்க்கும் 'இறைவன்' டிரைலர்..!
Published on

சென்னை,

'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது, தற்போது நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள 'இறைவன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து பல இளம்பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பற்றிய கதையாக 'இறைவன்' திரைப்படம் இருக்கும் என்பது டிரைலர் மூலம் தெரிகிறது. ஜெயம் ரவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி 'இறைவன்' திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் டிரைலரில் 'இறைவன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com