

சென்னை,
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகள் ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது அன்பிற்கினிய மனிதருக்கும், அற்புதமான அப்பாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் எப்போதும் தன்னை சிரிக்க வைக்கும் ஒரே மனிதர் நீங்கள்தான் என்றும், நீங்கள் காணும் கனவு அனைத்தையும் நனவாக்கிட என் வாழ்த்துகள் எனவும் அவர் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.