'ஓம்' படத்தில் தனுஷின் பல முகங்களை பார்க்கலாம் - ராஜ்குமார் பெரியசாமி

ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்தபடம் உருவாகி வருகிறது என்று ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
'ஓம்' படத்தில் தனுஷின் பல முகங்களை பார்க்கலாம் - ராஜ்குமார் பெரியசாமி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'ஓம்' திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

"65 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது"

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், "'ஓம்' என்ற தலைப்புடன் தற்போது படம் 65 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமான படமாக இருக்கும். 'ஓம்' என்பது ஒரு தெய்வீகமான தலைப்பு. அந்த தலைப்புக்கேற்ற வகையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது" என்று தெரிவித்தார்.

'கருப்பு' பட எடிட்டரே 'ஓம்' படத்திலும்

படத்தின் தொழில்நுட்பக் குழு குறித்து பேசிய அவர், "'கருப்பு' திரைப்படத்தில் பணியாற்றிய எடிட்டர்தான் இந்தப் படத்திலும் எடிட்டராக பணியாற்றுகிறார். 'ஓம்' திரைப்படத்தில் தனுஷ் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமர்ஷியல் மற்றும் எமோஷனல் அம்சங்களை இணைத்து, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் படம் உருவாகி வருகிறது என்றார்.

மம்முட்டியின் கதாபாத்திரம் வெளியானது

மேலும், "இந்த திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி 'கார்த்திகேயன்' என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்றும் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார். ராஜ்குமார் பெரியசாமியின் இந்த பேச்சு, 'ஓம்' திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com