‘பெரிய ஆளாக்கிட்டாங்க!’ – கிசுகிசு குறித்து மிருணாள் தாகூர் கமெண்ட்

அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிருணாள் தாகூரின் அவரை பற்றி பரவும் கிசுகிசுக்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
‘பெரிய ஆளாக்கிட்டாங்க!’ – கிசுகிசு குறித்து மிருணாள் தாகூர் கமெண்ட்
Published on

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மிருணாள் தாகூர் தனது இயல்பான நடிப்பால் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீப காலமாக, அவர் தனுஷ்-ஐ காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அந்த தகவல்களை மிருணாள் தாகூர் தெளிவாக மறுத்தார்.

அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “உங்களை பற்றிய காதல் கிசுகிசுக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “கிசுகிசுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ரூ.10 கோடி செலவு செய்திருந்தாலும் இப்படிப்பட்ட விளம்பரம் கிடைத்திருக்காது. ஆனாலும் இல்லாதவற்றை இருப்பது போல பேசி என்னை பெரிய ஆளாக்கி விட்டார்கள்,” என்று சிரிப்புடன் தெரிவித்தார். அவரின் இந்த பதில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com