கனவுகளை சுமந்து வரும் இளம் பாடகர்களை ஊக்குவிக்க வேண்டும் - சிந்து வாசுதேவன்

ஏ.ஐ. தொழில்நுட்பம் இசைத்துறைக்கு உதவியாக இருந்தாலும், மனித உணர்ச்சிகளை துல்லியமாக அதில் எதிர்பார்க்க முடியாது என்று பாடகி சிந்து வாசுதேவன் கூறியுள்ளார்.
கனவுகளை சுமந்து வரும் இளம் பாடகர்களை ஊக்குவிக்க வேண்டும் -  சிந்து வாசுதேவன்
Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, ராஜஸ்தானி என 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுயாதீன பாடல்கள் பாடி வருபவர், சிந்து வாசுதேவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர், விரைவில் தென்னிந்திய மொழி படங்களிலும் பாடல்கள் பாட இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இப்போதைய இளம் தலைமுறையினர் பல திறமைகளுடன் இசைத்துறைக்கு வருகிறார்கள். அப்படி கனவுகளை சுமந்து வரும் இளம் தலைமுறையினரை, குறிப்பாக சுயாதீன பாடகர் களை இசையமைப்பாளர்களும், திரைத்துறையினரும் ஊக்குவிக்க வேண்டும். என்னதான் ஏ.ஐ. தொழில்நுட்பம் இசைத்துறைக்கு உதவியாக இருந்தாலும், மனித உணர்ச்சிகளை துல்லியமாக அதில் எதிர்பார்க்க முடியாது. அந்தவகையில் குரல் வழி பாடலே சிறந்தது என்பேன். என் மனம் கவர்ந்த பாடகர் என்றால் ஸ்ரேயா கோஷல் தான். அவரது இசை ஆளுமையும், எளிமையான போக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும். சுயாதீன கலைஞர்கள் தற்போது அதிகளவில் கவனம் ஈர்த்து வருகிறார்கள். இதெல்லாம் மகிழ்ச்சியும், அதேவேளை நம்பிக்கையும் தருகிறது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com