பிரபல மலையாள நடிகைக்கு திருமண தொல்லை கொடுத்த வாலிபர் கைது

நடிகையின் வீட்டு வாசல் முன்நின்று தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வாலிபர் ஒருவர் கூச்சலிட்டார்.
Image Credits: AI
Image Credits: AI
Published on

தளிப்பரம்பு,

கேரளம் மாநிலம் கண்ணூர் அருகே பிரபல மலையாள நடிகை ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று நடிகை, குடும்பத்துடன் இருந்தார். அப்போது காலை நேரத்தில் வாலிபர் ஒருவர், நடிகை வீட்டு வாசல் முன் வந்து நின்றார். மேலும் அவர் கையில் ஒரு புத்தகம், புதிய பட்டுச்சேலை வைத்திருந்தார். பின்னர் அவர் தான் வைத்திருந்த பட்டுச்சேலையை உயர்த்தி காட்டி நடிகை உடனடியாக தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூச்சலிட்டார்.

இதனை கேட்டு வெளியே வந்த நடிகை அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து நடிகையும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாளிட்டு கொண்டனர். அத்துடன் சம்பவம் குறித்து கண்ணூர் நகர போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தளிப்பரம்பு அருகே உள்ள கோவேரி அடுத்த அம்மம்குளம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் ஜார்ஜ்(வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com