பிரிவினை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பேச்சை இளைஞர்கள் கேட்க வேண்டாம் - நடிகர் யாஷ்

யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படம் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரிவினை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பேச்சை இளைஞர்கள் கேட்க வேண்டாம் - நடிகர் யாஷ்
Published on

இந்தியாவில் பிரிவினை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பேச்சை நீங்கள் கேட்க வேண்டாம் என்று இளைஞர்களுக்கு நடிகர் யாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. இப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ஹூமா குரேஷி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதன் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் படக்குழுவினர் உள்பட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அங்கு பேசிய நடிகர் யாஷ், “மிக விரைவாக இந்திய சினிமாவை உலக அரங்குகளுக்கு கொண்டு சென்று நிலை நிறுத்துவோம். இங்கு இளைஞர்களும் மாணவர்களும் இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவை ஒருபோதும் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்களெல்லாம் எதையும் பெரிதாக சாதித்துவிடவில்லை. ஆனால், நீங்கள் வாழ்வில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதைக் கனவாகக் கொண்டு கடினமாக உழையுங்கள். வெற்றியும் மரியாதையும் நிச்சயமாக உங்களைத் தேடி வரும். எதிலாவது தோல்வியடைந்தால், அதற்காக உலகத்தைக் குறை சொல்லாதீர்கள்; அந்தத் தோல்விக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

இளைஞர்களுக்கு ஒரு கோரிக்கை, இந்தியாவில் பல மாநிலங்கள் உண்டு அவரவர்கென ஒரு மொழி உண்டு. நம் மொழி மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம். ஆனால் இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். அதை உடைத்து அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பேச்சை நீங்கள் கேட்க கூடாது. வடக்கு, தெற்கு என்ற பிரிவுகள் வேண்டாம். நீங்கள் உழைத்தால், நாட்டில் எங்கு சென்றாலும் உங்களுக்கு அன்பும், மரியாதையும் கிடைக்கும். வேறு எங்கிருந்தும் இங்கு வந்து நல்ல உழைப்பை கொடுத்தால், நீங்களும் அன்பை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com