ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் யுவன்!

தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் யுவன்!
Published on

சென்னை,

யுவன் சங்கர் ராஜா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது ரசிகர்கள் #HBDYuvanShankarRaja என்ற ஹேஷ்டாக் மூலம் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கதாநாயகர்களுக்கு இணையாக யுவன் சங்கர் ராஜாவுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும், அவருக்கு கட் அவுட் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அந்தவகையில், இன்று வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் என திரும்பிய பக்கமெல்லாம் யுவன் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்று நாம் ட்விட்டர் மூலம் உரையாடலாம். உங்களுடைய கேள்விகளை #AskU1 என்ற ஹேஷ்டாக் மூலம் கேளுங்கள். நான் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். இதனால் யுவன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். யுவன் ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் தளபதி - யுவன் சங்கர் ராஜா எப்போது இணைவார்கள்? நீங்கள் இசையமைத்த பாடல்களில் உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும்? ஏன் பிடிக்கும்? என்று கேட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com