ரூ 50 கோடி வசூலை எட்டிய ராதிகா சரத்குமாரின் “தாய் கிழவி”

இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் வயதான தோற்றத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ரூ 50 கோடி வசூலை எட்டிய ராதிகா சரத்குமாரின் “தாய் கிழவி”
Published on

சென்னை,

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள 'தாய் கிழவி' திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சிவகார்த்திகேயன் இயக்கியுள்ள இந்த படம் ரூ.கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் முதிர்ந்த தோற்றத்தில் தனது சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தில் நல்ல கருத்தை காமெடி கதைக்களத்தில் சொல்லும் இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com