‘பார்ட்டி’க்கு போனால்தான் பட வாய்ப்பா? -ரகுல்பிரீத் சிங்

ரகுல்பிரீத் சிங் ‘இந்தியன்-2 ’படத்தில் நடித்து வருகிறார். இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
Published on

பார்ட்டிக்கு போனால்தான் பட வாய்ப்பா? ரகுல்பிரீத் சிங் - அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தென்னிந்தியாவில் 25 படங்களில் நடித்து விட்டேன். என்னை இந்த அளவு வளர்த்து ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி. அடுத்து இந்தி படங்களில் பார்வையை திருப்ப முடிவு செய்து இருக்கிறேன். அதற்காக தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. எனது கதாபாத்திரத்தை பொறுத்து நடிப்பதா? வேண்டாமா என்பதை முடிவு செய்வேன்.

வளர்கிற நடிகைகள் சரியான முடிவுகள் எடுப்பது முக்கியம். இல்லாவிட்டால் சினிமா வாழ்க்கை பாதிக்க ஆரம்பித்து விடும். தவறான முடிவுகள் எடுத்து விட்டு பிறகு படம் ஓடவில்லை என்று வருந்த கூடாது. நம் தவறுகளுக்கு நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது என்று ஜாக்கிரதையாக இருக்கிறேன். இப்போது இந்தியில் 2 படங்களில் நடிக்கிறேன். இது தவிர மேலும் 3 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. பார்ட்டிகளுக்கு போனால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று பேசுகின்றனர். அங்கு தொடர்புகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே பட வாய்ப்புகள் தேடி வரும். இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com