அஜித் ரசிகர்களுக்கு செம அப்டேட்... ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆகஸ்டில் வெளியாகிறதா?

இந்த ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார்.
அஜித் ரசிகர்களுக்கு செம அப்டேட்... ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆகஸ்டில் வெளியாகிறதா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார் 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் அறிமுகமானார். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இதற்கிடையில், அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் புதிய ஆவணப் படம் உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ரேசிங் உலகில் அஜித்தின் சாதனைகளை ரசிகர்கள் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 'கிளாடியேட்டர்ஸ்' ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி,'கிளாடியேட்டர்ஸ்' என்கிற தலைப்பில் உருவாகிவரும் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com