நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தய அட்டவணை வெளியீடு

வரும் மார்ச் 20ம் தேதி தொடங்கி 2027 ஜனவரி17 வரை பங்கேற்கும் கார் பந்தயங்களின் அட்டவணையை அஜித்குமாரின் ரேஸிங் அணி வெளியிட்டது.
நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தய அட்டவணை வெளியீடு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் ‘குட்​பேட் அக்​லி’ படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது. அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் கலந்து கொண்டார். ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வந்தார்.

அஜித் குமார் அடுத்த ஒரு ஆண்டு பங்கேற்க இருக்கும் ரேஸ் விவரங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி வரும் மாதங்களில் க்ரெவென்டிக் ஐரோப்பிய தொடர், மிஷெலின் லீ மான்ஸ் கப் மற்றும் ஆசிய லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் பங்கேற்றகிறார். மேலும், இந்த இரு தொடர்களின் அட்டவணையும் வெளியாகி உள்ளது.

வரும் மார்ச் 20ம் தேதி தொடங்கி 2027 ஜனவரி17 வரை பங்கேற்கும் கார் பந்தயங்களின் அட்டவணையை அஜித்குமாரின் ரேஸிங் அணி வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com