குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு

கருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் "தாராள பிரபு" விமர்சனம் பார்க்கலாம்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு
Published on

"தாராள பிரபு" கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் கால்பந்தாட்ட வீரர். விளையாட்டு கோட்டாவில் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவருக்கும், தன்யாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அதன்பிறகு விவேக்கை விட்டு விலகுகிறார். ஆனால் தன்யாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத குறை உள்ளதால் ஒரு சிறுமியை தத்தெடுக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களும், பிரச்சினைகளும் மீதி கதை.

ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். காதல் வயப்பட்டு தன்யாவை சுற்றிவரும் காட்சிகள் சுவாரஸ்யம். மனைவி பிரிவிலும், அவரும் குழந்தையும்தான் தனது உலகம் என்று உருகும்போதும் நெகிழ வைக்கிறார். கருத்தரிப்பு மைய டாக்டராக வரும் விவேக் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு நகைச்சுவை குணசித்திர நடிப்பில் அமர்க்களப்படுத்தி உள்ளார்.

ஹரிஷ் கல்யாணை சுற்றிவந்து விந்தணு தானத்துக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. தன்னால் ஹரிஷ் கல்யாண் வாழ்க்கை தடம் புரண்டது அறிந்து கலங்கும்போது அனுபவ நடிப்பால் கவர்கிறார். தன்யா அமைதியான காதலியாக வருகிறார். அனுபமா, பாட்டியாக வரும் சச்சு கதாபாத்திரங்களும் நேர்த்தி.

விந்தணு தான விழிப்புணர்வை மையமாக வைத்து கதையை கலகலப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. இறுதி வரை காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைத்ததில் அவரது திறமை பளிச்சிடுகிறது. செல்வகுமாரின் கேமரா கதையின் தன்மைக்கு ஏற்ப காட்சிகளை கச்சிதமாக படம்பிடித்து உள்ளது. பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை பலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com