

ஆம்புலன்ஸ் டிரைவரான பகத் பாசில், எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்குகிறார். அரசியல்வாதி ஒருவரிடம் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார். இதற்கிடையில் பகத் பாசிலுக்கு ஒரு மேஜிக் பொருள் கிடைக்கிறது. சிறுமி சாராவும் அவரிடம் வந்து சேருகிறாள். இந்த சூழலில் சிறுமியை கடத்தி அவளது பெற்றோரிடம் பணம் பறிக்க பகத் பாசில் நினைக்கிறார். ஆனால் அதன் பின்பு தான் தெரிய வருகிறது, சாரா பெரும் சிறுமி மட்டும் கிடையாது அவள் ஒரு பேய் என்று... இதனால் பயந்து ஓடும் பகத் பாசிலை சமாதானப்படுத்துகிறார் சாரா.
தனக்கு உள்ள சக்தி மூலம் பகத் பாசிலுக்கு உதவ நினைக்கிறார் சாரா. அதேவேளை சாராவின் பெற்றோரை கண்டுபிடிக்க பகத் பாசில் முடிவு செய்து சில நடவடிக்கைகளில் இறங்குகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை கலகலப்பான மீதி கதை.
பகத் பாசில் வழக்கம் போல கலகலப்பான கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். அவரது துரு துரு நடிப்பு படத்துக்கு பலம் சேர்ப்பதுடன் ரசிக்க வைக்கிறது. பகத் பாசிலுக்கு ஈடு கொடுத்து நடித்து வியக்க வைத்துள்ளார் சிறுமி சாரா. அவரது கலகலப்பான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
மகேஷ் மஞ்ரேக்கர், சவுரப் சச்தேவ், வெங்கடேஷ் காகமனு, சுப்புராஜூ, திவ்யா பிள்ளை, சஷாங்க் உள்பட அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பிராட் பிரன்சிஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. மாயாஜால உலகை விரும்பும் சுட்டீஸ்களுக்கு நிச்சயம் விருந்து தான். கால பைரவா இசை படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. கலகலப்பு மிக்க காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதை இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய வகையில் மேஜிக் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் சஷாங்க் எலேட்டி.