“ஹாட் ஸ்பாட் 2 மச்”- சினிமா விமர்சனம்


“ஹாட் ஸ்பாட் 2 மச்”- சினிமா விமர்சனம்
x

விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

‘ஹாட் ஸ்பாட்’ முதல் பாகத்தில் பிரபல தயாரிப்பாளரின் மகள் பிரிகிடாவை காதலிக்கும் விக்னேஷ் கார்த்திக், அந்த தயாரிப்பாளரிடம் சென்று நான்கு கதைகளை கூறி முடித்து காதல் கதையின் கட்டை அவிழ்ப்பார். அதிலிருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது.

பிரிகிடா - விக்னேஷ் கார்த்திக் திருமணம் நடந்து முடிய, இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு ஆகிறது. முதலிரவில் பிரிகிடாவுக்கு இதில் உடன்பாடு இல்லை என தெரியவருகிறது. தான் ஒரு லெஸ்பியன் என்று பிரிகிடா கூற, விக்னேஷ் கார்த்திக் அதிர்கிறார். இதுபோதாதென்று விக்னேஷ் கார்த்திக்கிடம் துணை இயக்குனராக பணிபுரிய ஆசைப்படும் பிரியா பவானி சங்கரை தான் காதலிப்பதாகவும் கூறுகிறார். பிரிகிடாவின் நிலையை அறிந்து, விக்னேஷ் கார்த்திக் திட்டம் ஒன்றை போடுகிறார்.

விக்னேஷ் கார்த்திக் எப்படி பிரிகிடாவின் தந்தையிடம் சென்று, கதை சொல்லி திருமணத்திற்கு ஓ.கே. வாங்கினாரோ, அதேபோல் பிரியா பவானி சங்கரை தயாரிப்பாளரிடம் அனுப்பி வைக்கிறார்கள். பிரியா பவானி சங்கரும் மூன்று கதைகளை கூறுகிறார். இதன்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

முதல் கதையில் வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு தூள் பறக்கிறது. இரண்டாம் கதையில் தம்பி ராமைய்யாவின் நடிப்பு பட்டையை கிளப்புகிறது. மூன்றாம் கதையில் அஷ்வின் - பவானி ஸ்ரீ யின் காதல் கூட்டணியில் காட்சிகள் கலகலப்பாக நகருகிறது.

நடிகனை கொண்டாடும் ரசிகர்கள், ஆடை சுதந்திரம், பேண்டசி காதல் என்று படம் முழுக்க கலகலப்பாகவும், புதுமையாகவும் காட்சிகள் நகருகிறது. ஆனால், போன் நம்பர் மாறியதால் 2050-ல் வாழும் ஒருவருக்கு கால் போவதெல்லாம் ஓவர் இல்லையா...

நடிகர்-நடிகைகளின் மிகையில்லா நடிப்பு பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.

வித்தியாசமான கதைக்களத்தில் அனைத்து அம்சங்களின் கலவையாகவும், சமூக கருத்துகளை கொண்ட படமாகவும் இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், விக்னேஷ் கார்த்திக்.

1 More update

Next Story