"நூறு சாமி" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள "நூறு சாமி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
நூறு சாமி
Published on

சிறுவயதிலேயே கணவனை இழந்த சுவாசிகா, தனது இரு மகன்களான அஜய் திஷான், சக்தி ஆகியோரை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். ஒருகட்டத்தில் மறுமணத்துக்கு ஆசைப்படும் சுவாசிகாவை பிள்ளைகள் வெறுக்கத் தொடங்க, அந்த ஆசையை குழிதோண்டி புதைக்கிறார். இரு பிள்ளைகளும் வளர்ந்து காதலிக்க தொடங்கும்போது, தன் தாயின் நியாயமான ஆசையை புரிந்து கொள்கிறார்கள். சுவாசிகாவின் மீதி வாழ்க்கை பிரகாசிக்க, அவருக்கு ஒரு திருமணத்தை நடத்த முடிவு செய்கிறார்கள்.

மகன்களின் வற்புறுத்தலை ஏற்று விஜய் ஆண்டனியை சந்திக்கும் சுவாசிகா, அவரது நல்ல மனது பிடித்துப் போக அவரை 2-ம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். திருமணத்தை மகன் களே முன்னின்று நடத்த தயாராகிறார்கள்.

இதற்கிடையில் ஊர் மானம் போய்விடுமே... என்று கூறி ஊர்க்காரர்கள் வெட்டுக்கம்பு, வீச்சரிவா ளுடன் திருமணத்தை நிறுத்த ஒன்று சேருகிறார்கள். திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா? சுவாசிகா வின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதி கதை.

கதாநாயகன் என்ற அடையாளத்தை தாண்டி, சிறப்பு தோற்றம் போல வந்து செல்கிறார் விஜய் ஆண்டனி. கதையின் நியாயத்தை உணர்ந்து நடித்திருக்கும் அவரை பாராட்டலாம். இப்படியும் நடிக்க முடியுமா? என்ற ரீதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார், சுவாசிகா. மனதின் ஆசைகளை பூட்டி வைத்து சமூகத்தில் பலியாடுகளாக சுற்றும் பெண்களின் மனநிலையை கண் ணாடியாய் பிரதிபலித்துள்ளார். மகன்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது கலக்கத்தில் அவர் கதறி அழும் ஒரு காட்சி நெகிழ்ச்சி.

கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸ் மூலமாக எதார்த்தத்தை சொன்ன விதம் சிறப்பு. கருணாசின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. பாலாஜி சக்திவேல், காவ்யா அனில், பாதினிகுமார் என அனைவருமே சிறப்பான தேர்வு.

தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமை கண்கூசுகிறது. பாலாஜி ஸ்ரீராம் இசை மனதை வருடுகிறது.

உணர்வுப்பூர்வமான எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். 2-ம் பாதியில் சில காட்சிகள் முழுமை யடையவில்லை. எமோஷனலான காட்சிகளை காமெடியில் நகர்த்தியது ஏன்?

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இக்கதையில் ஒற்றை பெற்றோரின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லியதுடன், அம்மாவை மனுஷியாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை ஆழ மாக சொல்லி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் சசி.

நூறு சாமி - கண்ணாடி பாத்திரம்

X

Daily Thanthi
www.dailythanthi.com