"சரீரம்" திரை விமர்சனம்


சரீரம் திரை விமர்சனம்
x

இயக்குனர் ஜி.வி.பெருமாள் இயக்கிய சரீரம் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

கல்லூரியில் படிக்கும் தர்ஷன் பிரியனும், சார்மி விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு சார்மி விஜயலட்சுமி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒருகட்டத்தில் தர்ஷன் பிரியனை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள்.

இக்கட்டான சூழலில் காதலை முறித்துக் கொள்ள விரும்பாத காதலர்கள், யாருமே செய்ய துணியாத ஒரு விஷயத்தை துணிந்து செய்கிறார்கள். அது என்ன? அந்த வித்தியாசமான சிந்தனை அவர்களது காதலை சேர்த்து வைத்ததா? காதலர்கள் நினைத்தது நடந்ததா? என்பதே மீதி கதை.

தர்ஷன் பிரியன், எதார்த்த நடிப்பை கொடுக்க பெரிதும் முயன்று, ஓரளவு தேர்ச்சி பெற்றுள்ளார். காதலுக்காக அவர் நடத்தும் போராட்டம் கவனம் ஈர்க்கிறது. அழுத்தமான நடிப்பால் சார்மி விஜயலட்சுமி மனதில் நிற்கிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு தேவையான துணிச்சல் நடிப்பை வழங்கியுள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜெ.மனோஜ், கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி.வி.பெருமாள் மலைச்சாமி என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்களும் ‘பாஸ்' மார்க் வாங்குகிறார்கள்.

டொர்னாலா பாஸ்கர், பாரணி குமாரின் ஒளிப்பதிவை பாராட்டலாம். பாரதிராஜா இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசை சுமார். எதார்த்தம் நிறைந்த காதல் காட்சிகள் பலம். லாஜிக் மீறல் காட்சிகள் பலவீனம். திரைக்கதை மெதுவாக நகருகிறது. நம்ப முடியாத காட்சிகளை எந்த நம்பிக்கையில் வைக்கிறார்கள்?.

காதலுக்காக எதையும் செய்யலாம் என்ற வகையில் வித்தியாசமான படைப்பை கொடுத்ததுடன், மாற்று பாலினத்தவரின் வலி நிறைந்த வாழ்க்கையையும் அழுத்தமாக சொல்லி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஜி.வி.பெருமாள். ‘கிளைமேக்ஸ்' காட்சியில் நீதிபதி கதாபாத்திரம் சொல்லும் தீர்ப்பை இயக்குனரும் நம்பியிருக்கலாம்.

சரீரம் - விபரீத முயற்சி.

1 More update

Next Story