சூர்யாவின் அதிரடி வேட்டை... ‘சீன்’ திரைப்பட விமர்சனம்

இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் வெளியான சீன் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சூர்யாவின் அதிரடி வேட்டை... ‘சீன்’ திரைப்பட விமர்சனம்
Published on: 

கிரைம் பிரான்ச் போலீசில் அதிகாரியாக இருக்கும் சூர்யா அந்தப் பணியில் இருந்து விடுபட நினைக்கிறார். இதனால் முடிந்தவரை அனைவரிடமும் வெறுப்பை சம்பாதிக்கிறார். அப்போது நகரில் சில படுகொலைகள் நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக துருதுருவென சூர்யா இருந்த நேரத்தில், அவர் வேட்டையாடி பிடித்த சைக்கோ கொலையாளி கொலை செய்த பாணியில் இந்த கொலை அரங்கேறுகிறது.

இதையடுத்து சூர்யா பிடித்தது உண்மையான குற்றவாளி அல்ல, உண்மையான குற்றவாளி இன்னும் வெளியில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் நிலவுகிறது. தனது திறமையின் மேல் நம்பிக்கை இல்லையோ என்ற ஆதங்கத்தில் சூர்யா அந்தக் கொலையாளியை பிடிக்க திட்டம் போடுகிறார். இதற்காக தனியாக ஒரு குழுவையும் அமைக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவுக்கு கண் பார்வை இல்லாத மிகப்பெரிய ரகசியம் போலீசாருக்கு தெரிய வருகிறது. அதேவேளை இந்த வழக்கில் சூர்யாவின் கை ஓங்கக் கூடாது என்று போலீசாரும் அவரை கண்காணிக்கிறார்கள்.

கண் பார்வை தெரியாத சூழலில், காவல்துறையிலிருந்து விலகிய சூர்யா அந்த குற்றவாளியை பிடித்தாரா? அந்த குற்றவாளி யார்? கொலைகளின் பின்னணி என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

சூர்யா ஒட்டு மொத்த படத்தையும் தோளில் சுமந்து நடித்திருக்கிறார். அழுத்தமான அவரது நடிப்பும் ஜாலியான அவரது போக்கும் படம் முழுவதும் ரசிக்க செய்திருக்கிறது. கொலையாளியை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் உத்வேகங்கள் ஆச்சரியம் தருகிறது. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் நஸ்ரியா தனது கலகலப்பான நடிப்பால் கவர்கிறார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நஸ்லென், வில்லத்தனத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல முன்னணி நடிகரான டோவினோ தாமஸும் வில்லத்தனத்தில் மிரட்டி விட்டார்.

ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் என அத்தனை பேரும் பொருத்தமான தேர்வு.

வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு பற்றி கொள்கிறது. சுஷின் ஷியாம் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. பரபரப்பான விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சில நம்ப முடியாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

வழக்கமான க்ரைம் கதை என்றாலும், புதுமையான காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதையில் இந்த படத்தை நகர்த்தி காட்சிதோறும் ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஜீத்து மாதவன். இடைவேளையும் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

X