தி கான்ஜுரிங் 3

படம் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பேய் பிடிக்கிறது. இவனை காப்பாற்ற பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் இருவரும் பாதரியாருடன் இணைந்து போராடுகிறார்கள்.
தி கான்ஜுரிங் 3
Published on

படம் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பேய் பிடிக்கிறது. இவனை காப்பாற்ற பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் இருவரும் பாதரியாருடன் இணைந்து போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் அடங்கும் பேய், சிறுவனின் அக்காவை காதலிக்கும் இளைஞன், சிறுவனுக்கு பதிலாக தன்னை பேயிடம் அர்பணிக்கிறார், அதாவது பேய்யை தனுக்குள் வந்து சிறுவனை விட்டு விட சொல்கிறார்.

இது ஒரு சாத்தானின் வேலை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்கு காரணம் வீட்டில் வைத்திருக்கும் சூனியம் என்று தெரிய வருகிறது. இறுதியில் சூனியம் வைத்தது யார்? எதற்காக வைத்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.


பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் தம்பதிகள் மற்றவர்களுக்கு சூனியம் வைத்ததை கண்டுபிடிக்கும் போது, இவர்களுக்கும் சூனியம் வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். இதற்கு முன்னாடி நாம் பார்த்த கான்ஜுரிங் படத்தில், வீட்டில் இருக்கும் பேய்களை அடக்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், கூடவே பேயால் பாதிக்கப்பட்ட நபரின் வினோத செயல்கள் நம்மை திகிலூட்டும்.

அனால், இந்தப் படத்தில் பேய்கள் இல்லை, மிக அச்சுறுத்தும் அளவிற்கு காட்சிகளும் இல்லை, அதற்கு பதிலாக ஒரு சூனியக்காரியை அடக்குகிறார்கள். எதிர்பார்த்த அளவிற்கு திகில் காட்சிகள் இல்லை என்றாலும், படமே இல்லாத இந்த சமயத்தில், ஒரு முறை திரையரங்கில் தி கான்ஜுரிங்: தி டெவில் மேட் மீ டூ இட் பார்க்கலாம்.

டிரைலரில் வரும் காட்சிகள், நம்மை பேய்விரட்டலுக்கு வேறு கட்டத்திற்கு எடுத்து செல்வதை உணர்ந்தோம், ஆனால் இது ஒரு சாதாரண பழக்கப்பட்ட திகில் படமாக இருக்கிறது.

கான்ஜுரிங் படத்தின் மற்ற பாகங்கள், மிக சிறந்த முறையில் நம்மை மிகவும் திகிலூட்டும், ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே வருத்தம்.

மொத்தத்தில் தி கான்ஜுரிங் 3 பயம் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com