சீன எல்லையில், மைனஸ் 7 டிகிரி குளிரில் நடிக்க முடியாமல் தவித்த கதாநாயகன், கதாநாயகி!

சீன எல்லையில், மைனஸ் 7 டிகிரி குளிரில் கதாநாயகனும், கதாநாயகியும் நடிக்க முடியாமல் தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Published on

இரண்டரை மணி நேரமும் சிரிக்கும் வகையில், பிளான் பண்ணி பண்ணனும் என்ற பெயரில், ஒரு நகைச்சுவை படம் தயாராகி இருக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் கூறுகிறார்:

இது, ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன்.

பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோச மான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ஐ.டி. துறையில் வேலை செய்கிறான்.

கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறை வேறியதா? என்பதே கதை. படப் பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்தது.

சிக்கிமில் மைனஸ் 7 டிகிரி குளிர் வாட்டி வதைத்தது. கதாநாயகனும், கதாநாயகியும் நடிப்பதற்கே சிரமப்பட்டார்கள். படப்பிடிப்பு நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. அங்கிருந்து சீன எல்லை 5 கிலோ மீட்டர்தான். பனி படர்ந்த உயரமான மலைப் பகுதியும், கிடுகிடு பள்ளத் தாக்குகளும் பிரமிக்க வைத்தன.

திரைக்கு வர தயாராக உள்ள இந்த படத்தில் ரியோராஜ், ரம்யா நம்பீசன் ஆகிய இருவரும் கதாநாய கன், கதாநாயகியாக நடித்துள்ள னர். ராஜேஷ்குமார், எல்.சிந்தன் ஆகிய இருவரும் படத்தை தயாரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com