ஓராண்டுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

அமீர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் ஏப்ரல் 3ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஓராண்டுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான் . வர்த்தக ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல புரட்சிகர கதைகளைத் தேர்ந்து நடித்ததால், மொழியைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம். இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படம் வெளியானது. இதில், நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக அமீர்கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

தயாரிப்பாளரான அமீர் கான், ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமீர்கான் புரொடக்ஷன்ஸ் யூடியூப் சேனலில் poy-per-view முறையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. யூடியூபில் போதிய வரவேற்பு இல்லாததாலேயே அமீர்கான் ஓடிடி ரிலீஸ் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

இந் நிலையில், அமீர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் திரையரங்க ரிலீஸ்க்கு பின் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை காண தவறவிட்டவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com