ஏகன் நடித்த “ஹைக்கூ” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், பெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஹைக்கூ’ படம் கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியானது.
ஏகன் நடித்த “ஹைக்கூ” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

ஏகன் நடித்த ‘ஹைக்கூ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப் புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் ‘ஹைக்கூ’ படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். யுவராஜ் சின்னசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பீல் குட் லவ் என்டர்டெய்ன்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

காதலியால் கைவிடப்பட்ட நாயகனுக்கும், காதலனால் மன சித்திரவதைக்கு உள்ளான கதாநாயகிக்கும் இடையே மலரும் காதல் என்ன ஆனது என்பதே ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் கதை.

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், பெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டோர் நடித்த ‘ஹைக்கூ’ படம் கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

X