திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியில் ‘சர்தார் 2’.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

பி.எஸ். மித்ரன் இயக்கிய ‘சர்தார் 2’ படம் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது.

திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியில் ‘சர்தார் 2’.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
Published on: 

‘சர்தார் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

நட்சத்திர பட்டாளத்துடன் ‘சர்தார் 2’

‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படம் சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 1-ல் ஓடிடி ரிலீஸ்?

இந்த நிலையில், ‘சர்தார் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. விரைவில் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடியில் காணலாம்

திரையரங்குகளில் ‘சர்தார் 2’ படத்தை காணத் தவறிய ரசிகர்கள், ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், படத்தை ஓடிடியில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com