நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டீசர்


நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள ஐந்தாம் வேதம் வெப் தொடர் டீசர்
x
தினத்தந்தி 12 Oct 2024 8:04 PM IST (Updated: 12 Oct 2024 8:24 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள 'ஐந்தாம் வேதம்' வெப் தொடர் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை,

90களின் பிரபலமான 'மர்மதேசம்' தொடரின் இயக்குநர் நாகா, 'ஐந்தாம் வேதம்' என்ற தலைப்பில் ஒரு சீரிஸ் இயக்கியிருக்கிறார். இந்த சீரிஸை அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருக்க சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது இந்த சீரிஸின் டீசர், தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடர் புராணங்களை அடிப்படையாக கொண்ட திரில்லராக உருவாகியிருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதும், அதையொட்டிய மர்மங்களும் தொடர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. சந்தோஷ் பிரதாப், சாய் தன்ஷிகா கவனம் ஈர்க்கின்றனர். இந்தத் தொடர் வரும் அக்டோபர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம்.

1 More update

Next Story