ஓடிடியில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் 'பாம்'...எதில், எப்போது பார்க்கலாம்?


Arjun Das’ critically acclaimed film Bomb locks its streaming date
x

ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

சென்னை,

அர்ஜுன் தாஸ் சமீபத்தில் பாம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் , இப்படம் வருகிற 10 முதல் ஆஹா தமிழில் ஸ்ட்ரீமிக் ஆக உள்ளது. ஓடிடியில் வரவேற்பை பெற முடியுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

விஷால் வெங்கட் இயக்கிய இந்த படத்தை ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். காளி வெங்கட், நாசர், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story