ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' திரைப்படம்

'ஏமாற்றாதே... ஏமாறாதே' என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவான 'கான் சிட்டி' திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.

ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' திரைப்படம்
Published on

'மாஸ்டர்', 'கைதி', 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தனித்துவமான குரல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார்.

திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற 'கான் சிட்டி'

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த 'கான் சிட்டி' திரைப்படம் கடந்த ஜூன் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான இதில், அர்ஜுன் தாஸுடன் அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம், நகைச்சுவை கலந்த திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

நெட்பிளிக்ஸில் வெளியீடு

'ஏமாற்றாதே... ஏமாறாதே' என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவான 'கான் சிட்டி' திரைப்படம், கடந்த 24-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம்

வெளியான சில நாட்களிலேயே 'கான் சிட்டி' திரைப்படம் இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் இப்படம் வெற்றிகரமாக பயணித்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com