

‘பாலன் தி பாய்’ திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், பர்ஹானா பளதிங்கள் நடித்துள்ளனர். சிதம்பரம் இயக்கிய ‘பாலன் தி பாய்’ திரைப்படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றிருந்தாலும் உருவாக்க ரீதியாகவும் திரை எழுத்தாகவும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாகப் பலரும் குறிப்பிட்டு வந்தனர். இப்படம் ரூ.33 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில், ‘பாலன் தி பாய்’ திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.