'ரெட்ரோ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்

ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான ரெட்ரோ படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'ரெட்ரோ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்
Published on

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது. ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரெட்ரோ படம் வருகிற 31-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ரெட்ரோ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஒரு நாள் முன்கூட்டியே மே 30-ந் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com