ஓடிடியில் வெளியாகும் “சத்தா பச்சா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

மலையாள நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ நடித்துள்ள ‘சத்தா பச்சா’ படம் வரும் 19ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
ஓடிடியில் வெளியாகும் “சத்தா பச்சா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் மம்முட்டி, அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான ‘சத்தா பச்சா’ கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

திரைப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், தமிழ், தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது.

மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான முதல் டிக்கெட்டை நடிகர் மோகன்லால் வாங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் 3 வாரங்களில் ரூ.33 கோடி வசூலித்திருந்தது.

இந்நிலையில்,‘சத்தா பச்சா’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 19ம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com