ஓடிடியில் ''தடக் 2'' - ’’அனிமல்’’ பட நடிகையின் படத்தை எப்போது, எதில் பார்க்கலாம்?

இது தமிழ் திரைப்படமான ''பரியேறும் பெருமாள்'' (2018)ன் ரீமேக் ஆகும்.
சென்னை,
''அனிமல்'' பட நடிகை திரிப்தி டிம்ரி மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடித்த பாலிவுட் படமான ''தடக் 2'', தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் தமிழ் திரைப்படமான ''பரியேறும் பெருமாள்'' (2018)ன் ரீமேக் ஆகும். இதை ஷாஜியா இக்பால் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று (செப்டம்பர் 26, 2025) முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இந்த படத்தில் ஜாகிர் உசேன், சவுரப் சச்தேவா, தீக்சா ஜோஷி, விபின் சர்மா, சாத் பில்கிராமி மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபீஸில் மந்தமான வசூல் இருந்தநிலையில், இப்போது ஓடிடியில் படத்தின் வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
Related Tags :
Next Story






