நடுங்க வைக்கும் வெப் சீரிஸ்...ஏழு மொழிகளில் வெளியாகும் ஹாரர் திரில்லர்- எதில் பார்க்கலாம்?

திகில் படப் பிரியர்களை நடுங்க வைக்கும் வெப் சீரிஸ் இப்போது ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
dont miss this horror series that is trending on ott movie
Published on

சென்னை,

ஓடிடிகளிலும் திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழைத்தவிர பிற மொழிகளிலும் திகில் படங்களைப் பார்ப்பதில் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். படங்களுடன், வெப் சீரிஸும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

அந்தவகையில் திகில் படப் பிரியர்களை நடுங்க வைக்கும் வெப் சீரிஸ் இப்போது ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அது என்ன தெரியுமா?

அது 1000 பேபிஸ். இந்த வெப் தொடர், கடந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. வெளியான ஒரு நாளுக்குள் இது டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தை எட்டியது. மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட இந்த 1000 பேபிஸ் வெப் தொடர் தற்போது ஏழு மொழிகளில் கிடைக்கிறது.

இது தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதை நாஜிம் கோயா இயக்கியுள்ளார். சஞ்சு சிவம், ஜாய் மேத்யூ, அடில் இப்ராஹிம் மற்றும் அஸ்வின் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com