'டிராகன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'Dragon' OTT release date announced
Published on

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த படம் 'டிராகன்'. கடந்த மாதம் 21-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 14-ம் தேதி இந்தியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com